சமந்தா வீட்டில் குவா குவா சத்தம்

Actress Samantha Acts in Telugu Film, Actress Samantha Acts in Tamil Film, Samantha Acted Movies, சமந்தா நடிக்கும் தெலுங்கு படம், சமந்தா நடிக்கும் தமிழ் படம், சமந்தா நடித்த படங்கள், samantha pregnent, samantha , nagachaitanya, samantha ruth prabhu

சென்னை: தெலுங்குப் படவுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, தற்போது கர்ப்பமாக இருப்பதால், தற்காலிகமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு முழு ஓய்வு எடுக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா தமிழ்த் திரையுலகில் பானா காத்தாடி படத்தில் அறிமுகமானாலும் தெலுங்கு பட உலகம் வாரி அணைத்துக்கொண்டது. அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Actress Samantha Acts in Telugu Film, Actress Samantha Acts in Tamil Film, Samantha Acted Movies, சமந்தா நடிக்கும் தெலுங்கு படம், சமந்தா நடிக்கும் தமிழ் படம், சமந்தா நடித்த படங்கள், samantha pregnent, samantha , nagachaitanya, samantha ruth prabhu

தெலுங்கில் அவர் நடித்த அனைத்து படங்களும் வசூலை வாரி வழங்கியது. இதனால் விரைவிலேயே தெலுங்குப் படவுலகில் முன்னணி நடிகையாக வலம் வரத்தொடங்கினார். கடந்த 2012ஆம் ஆண்டில் தெலுங்குப் பட உலகின் பிரமாண்ட இயக்குநரான எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் நடித்த ஈகா படம் வசூலில் புதிய சாதனை படைத்தது. இதனையடுத்து இந்தப் படம் தமிழில் நான் ஈ என்று மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

நான் ஈ மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டாலும் கூட தமிழிலும் வசூலை அள்ளியது. இதனால் மீண்டும் தமிழில் சில படங்களில் நடிக்கத் தொடங்கினார். தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, விஷால், தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் போன்றவர்களுடன் ஜோடியாக நடித்தார். தமிழில் சமந்தா நடித்த தெறி, மெர்சல், அஞ்சான், தங்க மகன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய திரைப்படங்கள் பெயரளவுக்கே வசூலாகின.
அதே சமயத்தில் தெலுங்கில் அவர் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வசூலை அள்ளித் தந்ததோடு, பொது மக்களிடமும் அவருக்கு நல்ல நடிகை என்ற பெயரைப் பெற்றத் தந்தது. அதிலும் அவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஓ பேபி திரைப்படமும் வசூலை அள்ளி சாதனை நிகழ்த்தியது. இப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது.

Actress Samantha Acts in Telugu Film, Actress Samantha Acts in Tamil Film, Samantha Acted Movies, சமந்தா நடிக்கும் தெலுங்கு படம், சமந்தா நடிக்கும் தமிழ் படம், சமந்தா நடித்த படங்கள், samantha pregnent, samantha , nagachaitanya, samantha ruth prabhu

இந்நிலையில் தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும்போதே, 2017ஆம் ஆண்டு தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நடிகர் நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் திருமணம் நடந்தது

திருமணம் முடிந்து தன்னுடைய ஹனிமூன் புகைப்படங்களையும் படம் பிடித்து இணையதளத்தில் வெளியிட்டு புரட்சியை ஏற்படுத்தினார். திருமணத்திற்கு பிறகும் சமந்தா படு பிசியாகவே நடித்து வந்தார். தற்போது தமிழில் விஜய் சேதுபதி-திரிஷா நடிப்பில் வெளியான 96 திரைப்படம் தெலுங்கில் ரீ-மேக் படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா தற்போது நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதால் தற்காலிகமாக சினிமாவில் நடிப்பதில் இருந்து விலகி இருக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தாவை ஒப்பந்தம் செய்ய வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களிடம், தான் ஒன்றரை வருடங்கள் வரையிலும் புதிய படங்கள் எதிலும் கையெழுத்திட போவதில்லை என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Actress Samantha Acts in Telugu Film, Actress Samantha Acts in Tamil Film, Samantha Acted Movies, சமந்தா நடிக்கும் தெலுங்கு படம், சமந்தா நடிக்கும் தமிழ் படம், சமந்தா நடித்த படங்கள், samantha pregnent, samantha , nagachaitanya, samantha ruth prabhu
South Indian film actress Samantha Prabhu poses with platinum jewellery during a promotional event at a jewellery shop in Hyderabad on April 26, 2013. India has one of the world’s largest consumer market for jewellery and precious metals. AFP PHOTO/Noah SEELAM (Photo credit should read NOAH SEELAM/AFP/Getty Images)

தற்போது நடித்து வரும் 96 ரீமேக் படத்தை கூடிய விரைவில் முடித்துவிட்டு ஓய்வு எடுக்க முடிவு செய்துள்ளார். அவரது ரி-என்ட்ரியிலும் நிச்சயம் பல வெற்றி படங்களில் நடிப்பார் அதுவரை காத்திருப்போம்.

credits: filmibeat

Leave a Response