15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்- நெல்லை ஆட்சியர் ஷில்பா

section 144 in nellai, puli thevar jayanthi, ondiveeran death anniversary, nellai 144 order, breaking clicks, breakingclicks

நெல்லை மாவட்டத்தில் அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் ஷில்பா உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள நெல்கட்டும் சேவல்பாளையத்தை ஆட்சி செய்தவர் மாமன்னர் பூலித்தேவன். இவரது ஜெயந்தி விழா வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.

பூலித்தேவனின் படைத் தளபதிகளில் ஒருவர் ஒண்டிவீரன். இவரது நினைவு தினம் பாளையம் அருகே பச்சேரியில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி இவர்களது சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

அதில் கலந்து கொண்டு மாமன்னர் மற்றும் படைத் தளபதிக்கு மரியாதை செலுத்த உள்ளனர். இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் ஆட்சியர் ஷில்பா பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

இதற்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் தொண்டர்கள், திறந்த வாகனங்களில் வரக்கூடாது. வாள், கத்தி போன்ற ஆயுதங்கள் கொண்டு வரக் கூடாது. சமூகம் சார்ந்த கோஷங்கள் எழுப்பக் கூடாது.

ஐந்திற்கும் மேற்பட்ட நபர்கள் கூட்டமாக நிற்கக் கூடாது. பால்குடம் முளைப்பாரி ஊர்வலம் செல்லக் கூடாது. பொதுத்துறை, சரக்கு, பொதுமக்கள் பயன்பாட்டு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

இதைத் தவிர்த்து பூலித்தேவன் மற்றும் ஒண்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கு வரும் தொண்டர்களின் வாகனங்கள் போலீசாரின் முன் அனுமதி பெற வேண்டும். வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 2ஆம் தேதி காலை 6 மணி வரை 15 நாட்களுக்கு, நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்.

முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு நாட்களில் மட்டும், வழியோரங்களில் அமைந்துள்ள 92 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Response